திருவண்ணாமலை: பவுர்ணமியை ஒட்டி இன்று முதல் ஆக.20 வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 130 பேருந்துகளும், நாளை 250 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை மாதவரத்தில் இருந்து 40 பேருந்துகளும், பல்வேறு இடங்களில் இருந்து நாளை தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 265 இயக்கப்பட உள்ளன.