சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: மகாசிவராத்திரியை முன்னிட்டு திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் பிப்.25ம் தேதி அன்று சென்னை – பெங்களூரிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 26ம் தேதி அன்று மேற்கண்ட இடங்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கும் இயக்கப்பட உள்ளது. இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி ஆகிய இணையதளங்களின் மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.