பாலக்காடு: கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு சொந்தமான வளர்ப்பு யானைகளுக்கு புணத்தூர் கோட்டையில் கடந்த ஒரு மாதகாலமாக சிறப்பு சுகசிகிச்சை முகாம் நடந்து வந்தது. கடந்த 31 நாட்களாக யானைகளுக்கு மசாஜ் குளியல், நடைப்பயணம், மூலிகை கலந்த சாப்பாடு ஆகியவை வழங்கப்பட்டன. திருவிழா காலங்களில் யானைகளுக்கு ஏற்பட்டகாயங்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி காயங்களை குணப்படுத்தினர்.
இம்முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் தேவஸ்தான சேர்மன் டாக்டர் விஜயன், கோபிகண்ணன் என்ற வளர்ப்பு யானைக்கு மூலிகை கலந்த சாப்பாட்டை ஊட்டினார்.