சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் டெலினா கோங்டுப் தலைமையில் பெண்களுக்கான சிறப்பு பொது குறைகேட்பு மகிளா ஜன் சுன்வாய் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு பொது குறைகேட்பு கூட்டத்தில் சென்னை மாவட்டத்தில் நிலுவையிலுள்ள புகார்கள் மற்றும் நேரில் பெறப்படும் புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களாக எடுத்துக்கொள்ளப்படும் என பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்நிகழ்வானது சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8வது தளத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வருகிற 9ம் தேதி மற்றும் 10ம் தேதி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் நடைபெறும்.
பெண்களுக்கான சிறப்பு பொது குறைகேட்பு முகாம்
0