மதுரை: ஐகோர்ட் மதுரை கிளைக்கு டிச. 23 முதல் ஜனவரி 1 வரை கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்கான விடுமுறை கால சிறப்பு நீதிமன்றம் டிச. 28ம் தேதி வழக்குகளை விசாரிக்கிறது. நீதிபதிகள் பி.வேல்முருகன், என்.செந்தில்குமார் ஆகியோர் அனைத்து வகையான டிவிஷன் பெஞ்ச் மனுக்களையும் விசாரிப்பர்.
நீதிபதி எல்.விக்டோரியா கவுரி அனைத்து வகையான ரிட் மனுக்களையும், நீதிபதி ஆர்.சக்திவேல் அனைத்து வகையான குற்றவியல் மனுக்களையும் விசாரிப்பர். இந்த விடுமுறை கால நீதிமன்றத்திற்கான சிறப்பு அலுவலர்களாக இணைப் பதிவாளர் பாலசுப்ரமணியன், உதவி பதிவாளர்கள் கே.சிவக்குமார், சி.லதா ஆகியோர் பணியாற்றுவர்.