சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு 945 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 27ம் தேதி 275 பேருந்துகளும், 28ம் தேதி 320 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து 27, 28ம் தேதிகளில் தலா 55 பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 பேருந்துகள் இயக்கம். மாதவரத்தில் இருந்து 27, 28ம் தேதிகளில் தலா 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
விடுமுறை நாட்களில் 945 சிறப்புப் பேருந்துகள்
0