Sunday, February 25, 2024
Home » திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

by Lakshmipathi

*ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்பு

செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு-ஆற்காடு சாலையில் புனித தூய வியாகல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா பங்குத்தந்தை சுதர்சன் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலியுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பங்கு இறை மக்கள் திருப்பலியில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

பின்னர், கூட்டு திருப்பலி நிறைவு பெற்று ஆலயத்தில் இருந்து பிறந்த குழந்தை இயேசுவை பங்கு தந்தை குடிலில் வைக்க கையில் ஏந்தியவாறு ஏராளமான இறை மக்கள் குடிலில் பிறந்த குழந்தை இயேசுவை வழிபட்டனர்.சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு-போளூர் சாலையில் உள்ள தூய லூர்து அன்னை கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயத்தில் பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ், உதவி பங்கு தந்தையர்கள் சதீஷ் ராஜ், ஸ்டீபன் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

இறைவன் ஏசுபிரான் பிறப்பு நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டு இயேசுவின் சொரூபத்தை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடிலில் வைக்கப்பட்டது.
இதனை, கடும் குளிரிலும் ஏராளமான கிறிஸ்துவர்கள் வணங்கி வரவேற்றனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

வேட்டவலம்: வேட்டவலம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேட்டவலம் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. ஆலய உதவி பங்குத்தந்தை அமுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான கிறிஸ்துவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

அவர்களுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் வேட்டவலம் மறைக்கோட்டத்திற்கு உட்பட்ட ஆவூர், ஜமீன் கூடலூர், நா.கெங்கப்பட்டு, சாணிப்பூண்டி, மதுராமபட்டு ஆகிய கிராமங்களில் உள்ள தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனையொட்டி நள்ளிரவு கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi