*எம்பி தொடங்கி வைத்தார்
வந்தவாசி : வந்தவாசி அடுத்த சோகத்தூர் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மண்டல இணை இயக்குனர் ராஜ்ய ஜெயக்கொடி தலைமை தாங்கினார். உதவி இயக்குனர்கள் ராமன், கவிதா, வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை இயக்குனர் பாலச்சந்திரன் வரவேற்றார்.
இதில் ஆரணி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு முகாமினை தொடக்கி வைத்து விவசாயிகளுக்கு பால், கேன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் 527 மாடுகளுக்கு குடல் புண் நீக்கம், ஆந்திராக்ஸ் நோய் தடுப்பூசி, 528 ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது மேலும் 27 மாடுகளுக்கு செயற்கை கருவுற்றல் ஊசிகள் செலுத்தப்பட்டன.
முகாமில் திமுக ஒன்றிய செயலாளர் ஆரியாத்தூர் பெருமாள், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் நேதாஜி குமரன், தொமுச மண்டல இணைச் செயலாளர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் கன்னியம்மாள் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி மருத்துவர் விஜயகுமார் நன்றி கூறினார்.