செய்யூர்: செய்யூரில் விசிக சார்பில், மகளிர் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விசிக கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறயுள்ளது.இந்த மாநாடு குறித்து, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மகளிர் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் செய்யூரில் உள்ள நேற்று நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் தமிழினி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் எழில் ராவணன் அனைவரையும் வரவேற்றார்.
இதில், மாவட்ட செயலாளர் தமிழினி கலந்து கொண்டு பேசுகையில், ‘போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கு ஐந்தாயிரம் பெண்களை பங்கேற்கச் செய்வது, போதை ஒழிப்பு குறித்து நிகழ்ச்சிகளை மாவட்ட முழுவதும் நடத்துவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கார்வேந்தன், புரட்சிமாறன், புகழேந்தி, தமிழ் விரும்பி, பேரூர் செயலாளராக அகிலன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.