டெல்லி: பழைய நாடாளுமன்ற வளாகத்திற்கு சம்விதான் சதன் என பெயர் வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார். சம்விதன் சதன் என பெயர் மாற்றம் செய்ய பிரதமர் மோடி பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா தகவல் தெரிவித்துள்ளார். பழைய நாடாளுமன்ற கட்டடம் என அழைக்கப்படாமல் சம்விதான் சதன் என அழைக்க மோடி தெரிவித்திருந்தார்.