சென்னை : மார்ச் 14-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை, மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் .ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். மார்ச் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு பட்ஜெட் தாக்கலுடன் சட்டப்பேரவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 14-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் : சபாநாயகர் அப்பாவு
0
previous post