உடலின் உஷ்ணத்தை குறைக்கும் தன்மை கொண்டது. இதனை முதலில் அணியும் பொழுது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். பின்பு இரவோ அல்லது மாலையிலோ நீங்கள் மாலையை கழட்டும் போது உங்கள் உடற்சூடிற்கு இணையாக இருக்கும்.
ஸ்படிகமணி மாலையை இரவில் அணியக்கூடாது. மந்திர ஜபத்திற்கு ஏற்ற மாலை. தொடர்ந்து நீங்கள் மந்திர ஜபத்தை இந்த மாலையில் செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு ஜபம் ஆரம்பித்த சிறிது நேரத்தில், ‘ஓம்’ என்ற பிரணவத்தை எதிரொளிக்கும் தன்மை கொண்டது.
ஒலியை கிரகித்து மீண்டும் அந்த ஒலியை வெளிப்படுத்தும் தன்மை ஸ்படிகமணி மாலைக்கு உண்டு. எந்த ஒரு மாலையையும் அணியும் முன் அதை சுத்தி (சுத்தம்) செய்ய வேண்டும். முதலில் மாலையை பசும்பாலில் ஒரு நாள் சுத்தி செய்து வைக்க வேண்டும். மறுநாள் பஞ்சகவ்வியத்தில் அந்த மாலையை முழுவதும் வைத்து பின்னரே நாம் குலதெய்வம், குருதெய்வத்தை வணங்கி அணிந்து கொள்ள வேண்டும். குளிக்காமல் மாலையை அணியக் கூடாது.