Saturday, April 20, 2024
Home » பறக்கும் படையால் ‘பறக்க’ முடியாமல் பரிதவிக்கும் குருவிகள்

பறக்கும் படையால் ‘பறக்க’ முடியாமல் பரிதவிக்கும் குருவிகள்

by Arun Kumar

சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர், தொழிலாளர்களாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளனர். வெளிநாட்டில் இருப்பவர்களின் பணத்தை இங்குள்ள அவர்களின் உறவினர்களிடம் அளித்து வருபவர்களே குருவிகள் எனப்படுகின்றனர். இவ்வாறு ஏராளமானோர் இந்த மாவட்டங்களில் குருவிகளாக செயல்பட்டு வருகின்றனர். ”

வெளிநாட்டில் உள்ள ஏஜென்ட்களிடம் பணம் வழங்கப்பட்ட சில நாட்களில், பணம் வழங்கியவர்களின் உறவினர்கள், அல்லது அவர்கள் வழங்க சொன்ன நபரிடம் பணம் வழங்கப்படும். வெளிநாட்டில் பணம் அளித்ததற்கோ அல்லது இங்கு பணம் பெற்றுக் கொண்டதற்கோ எந்த ஆதாரமும் இருக்காது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே இத்தொழில் நடந்து வருகிறது. வங்கி, போஸ்ட் ஆபீஸ், தனியார் நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்றாலும், இவை அனைத்தும் நகர்ப்புறங்களில் மட்டுமே உள்ளது.

மேலும், கிராமங்களில் பெண்கள், முதியோர்கள் மட்டுமே உள்ளதால் அவர்கள் சென்று பணம் எடுத்து வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனால் குருவிகள் மூலம் மட்டுமே வெளிநாட்டில் பணி செய்பவர்களின் ஏராளமான உறவினர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியில் ஈடுபடுபவர்கள் தாங்கள் பணம் கொண்டு செல்லும் குருவிகள் என்பதை எங்கும் காட்டிக்கொள்வதில்லை. பணம் பெறும் நபர்களுக்கு மட்டுமே இவர்களை தெரியும். இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலகோடி ரூபாய் ஆண்டுதோறும் வெளிநாட்டில் இருந்து வழங்கப்படும் பணம் உரியவர்களிடம் வழங்கப்படுகிறது.

ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பணம் வழங்கப்படுவது வழக்கம். இவர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு எந்த ஆவணமும் இருக்காது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் பணத்தை உரியவர்களிடம் வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment

thirteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi