சென்னை: ஸ்பெயின் மண்ணில் தமிழ்நாட்டின் அன்புமொழியை பேசிய கனிமொழிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்கு விளக்கிட கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் குழு ரஷ்யா, ஸ்லோவேனியா, லாட்பியா, கீரிஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். பயணத்தை முடித்துக் கொண்டு கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் இந்தியா திரும்பினர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னையில் முகாம் அலுவலகத்தில் கனிமொழி எம்பி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு: ஸ்பெயின் மண்ணில், ‘‘இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை” என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளை கைத்தட்டல்களாகவும் – உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன். இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை – ஒற்றுமைமொழியை பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.