ஸ்பெயினில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவுவதால் அதனை அணைக்க வீரர்கள் திணறி வருகின்றனர். லா பால்மா பகுதியில் பற்றிய காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதையடுத்து சுமார் 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், தீயானது கட்டுக்கடங்காமல் பரவுவதால் அதனை முழுமையாக அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. 300 தீயணைப்பு வீரர்கள் 10 ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஆனாலும் தீ முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. காட்டுத்தீயால் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










