* சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவும் ஆடியோ
சென்னை: ஒரு வாரத்துக்கு 4 முறை எனது ஸ்பாவுக்கு வந்து பெண் ஊழியர்களை தொந்தரவு செய்கின்றனர் என்று பாஜ மாவட்ட நிர்வாகிகள் 4 பேர் மீது, ஸ்பா நடத்தும் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை அடுத்த அம்பத்தூர் மற்றும் போரூரில் ஸ்பா நடத்தும் பாஜ முன்னாள் பெண் நிர்வாகி வளர்மதி என்பவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது: என் பெயர் வளர்மதி. என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி. நான் இப்ப மணலி புதுநகரில் இருக்கேன். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ பொதுச் செயலாளர் பொன் பாஸ்கரன் என்பவர், 7 வருடத்துக்கு முன்பு எனக்கு தெரியும். நான் அவரை கட்சியில் தான் சந்தித்தேன். 2 வருடத்திற்கு முன்பு பாஜவில் நான் இருந்தேன். மகளிர் அணியில் மாவட்ட பொருளாளராக 3 ஆண்டுகள் இருந்தேன். தற்போது உறுப்பினராக இருக்கேன். நான் அம்பத்தூரில் சலூன் உடன் ஸ்பா ஒன்று நடத்தி வருகிறேன்.
அதற்காக நான் 20 லட்சம் ரூபாய் லோன் மற்றும் வட்டிக்கு ரூ.5 லட்சம் வாங்கி மொத்தம் ரூ.25 லட்சம் செலவில் நான் ஸ்பா வைத்திருந்தேன். நான் இப்போது அந்த கட்சியை விட்டு வெளியே வந்துவிட்டேன். பொன் பாஸ்கர் கட்சியில் இருந்தாரு. இதனால் அவர், எனக்கு ஸ்பா நடத்த லைசன்ஸ் வாங்கி தருகிறேன் என்று கூறினார். அப்போது எனக்கு உதவி செய்வதாக சொன்னாரு. இதனால் நான் அவருடன் 8 மாதம் இருந்தேன். ஒரு மாதத்திற்கு ஸ்பாவில் இவ்வளவு பணம் வருகிறது. இதுபோல் வேறு ஒரு கடையை ஓப்பன் செய்வோம் என்று கூறினார்.
அப்போது என்னை ஏமாற்றி போரூரில் ஒரு கடையை ஓப்பன் செய்ய வைத்தார். அவரது நண்பர் பாஜ மாவட்ட பொது செயலாளர் முத்துராஜ் என்பவர் அம்பத்தூரில் உள்ள ஸ்பாவுக்கு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மசாஜ் எடுக்க வருவாரு. மசாஜ் எடுக்கும் பெண்கள், அவர் எங்களை ரொம்ப கஷ்டப்படுத்துகிறார் என்று என்னிடம் மீது புகார் சொல்வார்கள். இதனால் நான் அவரை கண்டித்தேன். அதேபோல், பாஜ அரசு பணியாளர் தலைவராக இருக்கும் பாஸ்கர் என்பவரும் வருவார். மாவட்ட தலைவர் செந்தில் குமார் என்பவரும் எங்கள் ஸ்பாவுக்கு வந்து செக்ஸில் ஈடுபடுவார்.
ஒரு நாள் நான் ஸ்பாவுக்கு வந்த போது, பொன் பாஸ்கர் என்னிடம் இவர் தான் செந்தில் குமார் என்று அறிமுகம் செய்தார். நான் இருந்ததால் அவர்கள் செக்ஸில் ஈடுபடவில்லை. அவர்களுக்கு நான் காபி கொடுத்தேன். அப்ப நான் செக்சுக்கு அனுமதிக்காததால் செந்தில்குமாருக்கு முகம் ஒரு மாதிரியாக மாறிவிட்டது. பிறகு உள்ளே வந்து பொன் பாஸ்கர் சொல்றார். இவங்களை கொஞ்சம் அலோ பண்றீயா என்று கேட்டார். இதுபோல் என்னிடம் வச்சிக்க கூடாது. பெண்களை அனுப்பினால் மட்டும் தான் ஸ்பா நடத்த முடியும் என்று சொன்னாங்க. ‘நான் அந்த தொழில் பார்த்தால் தான் கட்சியில் இருக்க முடியும்’.
இதை என் காரில் என்னுடன் அமர்ந்து கொண்டே பொன் பாஸ்கர் சொல்கிறார். நான் இதற்கு அனுமதிக்காதததால் என் பெயரில் மொட்டை பெட்டிஷன் கொடுத்து கடையை மூட வைத்துவிட்டார் செந்தில்குமார். நான் ஆபரேஷன் செய்து இருப்பதால் 3 மாதத்திற்கு கடைக்கே வரவில்ைல. அப்ப தான் இதுபோல் நடந்தது. நான் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு சென்று பொன் பாஸ்கர் மீது புகார் அளிக்க சென்றேன். அங்க இன்ஸ்பெக்டர் நீங்க தான் பாஜவில் உள்ள பாஸ்கரா? உங்களுக்காக தான் மேலிடத்தில் இருந்து போன் வந்ததா என்று அவர்களிடம் கேட்டார். என்ன சார் புகார் அளிக்க வந்தது நான். நீங்க அவனை போய் கை குலுக்கிறீங்க என்று கேட்டேன். அம்மா நீ என்ன குழந்தையா… என்று திட்டுகிறார் இன்ஸ்பெக்டர் தியாகராஜன். நான் உடனே முதல்வர் தனிப்பிரிவுக்கு போன் அடித்தேன்.
இதில் செந்தில்குமார் பங்கு என்ன என்றால், தவறு பண்றது தான். அதற்கு பொன் பாஸ்கர் பெண்களை அனுப்புகிறார். நானும் அந்த கட்சியில் தானே இருந்தோம். நம்மையை இப்படி பண்றாங்களே என்று வேதனைப்பட்டேன். பாஜ அரசு பணியாளர் தலைவராக உள்ள பாஸ்கரை நான் போட்டோவில் தான் பார்த்து இருக்கேன். நான் இருக்கும் போது ஸ்பாவில் அவரை பார்த்தது இல்லை. அதிகமாக மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் முத்துராசு தான் வாரத்துக்கு 4 நாட்கள் வந்து செக்சில் ஈடுபட்டாங்க. இவர்களுக்கு எல்லாம் இலவசம் தான். கோபத்தில் நான், பொன் பாஸ்கரிடம் நான் என்ன சத்திரமா நடத்துகிறேன் எல்லோரும் வந்து செல்ல. நான் பணம் போட்டு ஸ்பா நடத்துகிறேன். அவன் அக்கவுண்டில் ரூ.18 லட்சம் போட்டு இருக்கேன். பணமாக கையில் ரூ.5 லட்சம் பொன் பாஸ்கரிடம் கொடுத்து இருக்கேன்.
பாஜகவை சேர்ந்த செந்தில் குமார், பாஸ்கர், முத்துராஜ் ஆகியோரை என் காரில் தான் பொன் பாஸ்கரன் அழைத்து வந்து இப்படி செய்வான். என்னிடமே கட்சிக்கு நிதியாக என்று ரூ.25 ஆயிரம் வங்கி, அவர்களுக்கு செலவு செய்து இருக்கான். இவர்களுக்கு நான் ஒத்துழைக்க வில்லை என்பதால் என் கடையை கடந்த மே 5ம் தேதியே மூடிவிட்டாங்க. எனக்கு எதிராக மொட்டை பெட்டிஷன் கொடுத்துவிட்டு, திருநெல்வேலியில் உள்ள என் கணவருக்கு போட்டோ எடுத்து அனுப்பி மிரட்டினான். நான் எதுக்கு தான் உயிரோட இருக்கிறேன் என்று கூட நினைத்துவிட்டேன். பாஜ கட்சியில் இருந்து கொண்டு இதுபோல் பண்றான். சிவராஜ் என்பவர் பெயரில் ஆயிரம் விளக்கு, புரசைவாக்கம் என பல இடங்களில் ஸ்பா நடத்துகிறான். இவ்வாறு முன்னாள் பாஜ பெண் நிர்வாகியான வளர்மதி வேதனையுடன் ஆடியோ வெளியிட்டுள்ளார். மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் முத்துராசு தான் வாரத்துக்கு 4 நாட்கள் வந்து செக்சில் ஈடுபட்டாங்க. இவர்களுக்கு எல்லாம் இலவசம் தான்.