பெரம்பலூர்: பெரம்பலூரில் நேற்று நடந்த உடல் உறுப்பு தானம் முகாமில் எஸ்பி, சப்.கலெக்டர், இன்ஸ்பெக்டர் உள்பட 15 பேர் உடல்தானம் மற்றும் எஸ்ஐ, எஸ்எஸ்ஐ உள்பட 18 பேர் கண்தானம் செய்ய முன்வந்தனர். பெரம்பலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட மருத்துவம் , ஊரக நலப்பணிகள் துறை மற்றும் ஆற்றும் கரங்கள் குழு ஆகியோர் இணைந்து உடல் உறுப்பு தான முகாமை நேற்று நடத்தியது. பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமை வகித்தார்.
இந்த சிறப்பு முகாமில் எஸ்பி ஷ்யாம்ளா தேவி, சப்-கலெக்டர் கோகுல் மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசுவரன் உள்பட காவல் துறையை சேர்ந்த 15 பேர் உடல் தானம் செய்வதாக அறிவித்தனர். ஆயுதப்படை எஸ்ஐ பன்னீர் செல்வம், அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ குணவதி, பெரம்பலூர் காவல்நிலைய (நீதிமன்றம்) எஸ்எஸ்ஐ சின்னதுரை, ஏட்டு இளங்கோவன் உள்பட 18பேர் கண்தானம் செய்ய முன்வந்தனர்.