சென்னை: சிலந்தியாற்றில் தடுப்பணை கட்ட காவிரி தீர்ப்பாய இறுதித் தீர்ப்பின்படி உரிய முன் அனுமதிகளை கேரள அரசு பெற்றுள்ளதா என்று பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. பாம்பாறு துணைப்படுகையில் கேரள அரசு இதுவரை கட்டியுள்ள, கட்டுவதற்குத் திட்டமிட்ட தடுப்பணை விபரங்கள் பற்றி அறிக்கையளிக்க உத்தரவு அளித்துள்ளது. தடுப்பணை விபரங்கள் குறித்தும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க கேரள அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.