மதுரை: தவறுசெய்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, காவல்துறை கௌரவம் காப்பாற்றப்பட்டுள்ளது. வழக்கறிஞரை தாக்கியது தொடர்பான வழக்கில் தென்மண்டல ஐ.ஜி.க்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. 2022ல் மேலூர் காவல்நிலையத்தில் மனு கொடுக்கச் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞரை தாக்கிய டிஎஸ்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தார்.