செங்கல்பட்டு: தென்மேல்பாக்கத்தில் நேற்று 2வது நாளாக சுமார் 1000 கிலோ கஞ்சாவை போலீசார் எரித்து அழித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடம் உள்ளது. இங்கு, சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மூன்று மாநகர காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 1000 கிலோ கஞ்சாவை எரித்து அழிக்கப்பட்டன. இதனிடையே, நேற்று முன்தனம் சென்னை மாநகர காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட 440 கிலோ கஞ்சாவும், தாம்பரம் மாநகர காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட 441 கிலோ கஞ்சாவும், ஆவடி மாநகர காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட 190 கிலோ கஞ்சா என மொத்தம் 1071 கிலோ கஞ்சா எரிக்கப்பட்டன.
தென்மேல்பாக்கத்தில் 2வது நாளாக 1000 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு
previous post