சென்னை: மே 24 அல்லது 25ம் தேதியே தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வரும் 22ம் தேதி அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 24 அல்லது 25ம் தேதி தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
0