சியோல்: தென் கொரிய அதிபராக இருந்த மக்கள் அதிகார கட்சியின் யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பரில் திடீரென ராணுவ அவசரநிலை சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதனால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்ய ஜூன் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் மக்கள் அதிகார கட்சி வேட்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த கிம் மூன் சோ(73) போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான கொரிய ஜனநாயக கட்சியின் தலைவர் லீ ஜே மியுங்(60) களத்தில் குதித்தார். இவர்கள் இருவரை தவிர மேலும் 4 பேர் களத்தில் உள்ளனர். நேற்று நடந்த தேர்தலில் மொத்தம் 80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக துவங்கியது. இதில், துவக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் முன்னிலை பெற்றிருந்தார். புதிய அதிபர் பதவி ஏற்பு விழா இன்று நடைபெறுகிறது.
தென் கொரிய அதிபர் தேர்தல் எதிர்கட்சி வேட்பாளர் முன்னிலை
0
previous post