தென்கொரியாவில் நடைபெற்ற பாதுகாப்பு தளவாடங்களின் கண்காட்சியில் அந்நாட்டு ராணுவ விமானங்கள் அரங்கேற்றிய சாகசங்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க செய்தது. தென்கொரியாவின் சியோங்னம் படைத்தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாதுகாப்பு தளவாடங்களின் கண்காட்சி தொடங்கிவுள்ளது. தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தொடங்கிவைத்த இந்த கண்காட்சியில், ராணுவ டேங்கர்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள், ராடர்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் உள்ளிட்ட தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொடக்க விழாவில் தென்கொரிய பாராசூட் படை பிரிவினருடன் பன்னாட்டு வீரர்கள் விமானத்தில் இருந்து குதித்து நடத்திய சாகசங்கள், கரவொலிகளை அள்ளின.
















தென்கொரியாவில் தொடங்கிய பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி; மெய்சிலிர்க்க வைத்த பாராசூட் வீரர்களின் அற்புத சாகசங்கள்..!!
Published: Last Updated on