சென்னை: தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் முக்கிய பேச்சு வார்த்தை கூட்டம் சென்னை தியாகராயநகரில் இன்று நடைபெறவுள்ளது. கமல், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் மீதான புகார், நடிகர்களின் சம்பள விவகாரம், ஸ்டரைக், நடிகர் சங்கம் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது வைத்துள்ள புகார்கள் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.