மெக்சிகோ: தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளி புயலால் 48 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ நாட்டின் கோயுகா டி பெனிடெஸ் பகுதியில் ஏற்பட்ட திடீர் சூறாவளி புயலால் தெற்கு ெமக்சிகோ முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது. குடியிருப்பில் மின்சாரம், குடிநீர், தொலைபேசி சேவைகள் முழுமையாக தடைபட்டன. ‘ஓடிஸ்’ என்று அழைக்கப்படும் இந்த சூறாவளியால், இதுவரை 48 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 36 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உலக வானிலை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘வெப்பமண்டல சூறாவளிகளில் ஒன்றாக ‘ஓடிஸ்’ சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி புயலால், $15 பில்லியன் சேத மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 2,73,000 வீடுகள், 600 ஓட்டல்கள், 120 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.