Monday, March 4, 2024
Home » தென் மாவட்டங்களில் கனமழை வெள்ள பாதிப்பு நிவாரண உதவி தொகையை கூடுதலாக வழங்க வேண்டும்: அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்

தென் மாவட்டங்களில் கனமழை வெள்ள பாதிப்பு நிவாரண உதவி தொகையை கூடுதலாக வழங்க வேண்டும்: அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்

by Suresh

சென்னை: தென்மாவட்டங்களில் பாதிப்புகளையும் இழப்புகளையும் கணக்கிட்டு, நிவாரண உதவித் தொகையை பாரபட்சம் இன்றி கூடுதலாக வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்படும் என்றும், தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பேரிடரால் நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகப் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்துள்ளன. அதேபோல் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சூழலில், அரசின் நிவாரண உதவி தொகை அறிவிப்பு குறைவாகும். ஆகவே, நிவாரண உதவித் தொகையை பாரபட்சம் இன்றி கூடுதலாக வழங்கிட வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன்கள், கால்நடை கடன்கள், தனியார் நிதி நிறுவன கடன்கள், மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு அரசே கட்டி கொடுக்க வேண்டும். வியாபார நிறுவனங்களுக்கும், சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும்.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi