சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி காட்சி வாயிலாக நீலகிரி, கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கோவை மற்றும் நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிகிறார்.