திம்பு: பூடானில் 15வது தெற்காசிய ‘பாடி பில்டிங்’ அண்டு ‘பிசிக்’ சாம்பியன்ஷிப் போட்டிகள் 5 நாட்கள் நடந்தது. இதில் 155 மீ., உயரம் கொண்டவர்களுக்கான பிரிவில் அசத்திய இந்திய வீராங்கனை யாஜிக் ஹில்லாங் (அருணாச்சல பிரதேசம்) முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு பிரிவில் யாஜிக் வெள்ளி வென்றார். அருணாச்சல பிரதேசம் சார்பில் சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என சாதனைக்கும் யாஜிக் சொந்தக்காரர் ஆனார். இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட செய்தியில்,‘‘அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த யாஜிக், தெற்காசிய ‘பாடி பில்டிங்கில்’ தங்கம், வெள்ளி என இரு பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது,’’ என்றார்.
தெற்காசிய ‘பாடி பில்டிங்’ இந்தியாவின் ‘யாஜிக்’ தங்கம் வென்றார்
0