தேனி: எங்களுக்குள் இருந்த வருத்தங்களையெல்லாம் விட்டுவிட்டு ஒன்றிணைத்துள்ளோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நாங்கள் இருவரும் இணைந்திருப்பது சுயநலத்துக்காக அல்ல, முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக இணையவில்லை. துரோகத்தால் இரட்டை இலையை அபகரித்துள்ளனர். துரோகத்தை தவிர வேறு எதையும் அறியாதவர்கள் எடப்பாடி அணியினர் என டிடிவி தினகரன் சாடினார்.