புதுடெல்லி: லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த ஆக. 31, செப். 1ம் தேதிகளில் மும்பையில் நடந்த எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
டெல்லி திரும்பிய அவரக்கு நேற்று காலை லேசான காய்ச்சல் இருந்தது. இதனால், அவர் டெல்லியின் சர் கங்காராம் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.