புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி வயிற்று பிரச்னை காரணமாக கடந்த 15ம் தேதி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிவித்தது. மருத்துவமனையின் தலைவர் அஜய் ஸ்வரூப் “சோனியா காந்தியின் உடல் நிலை சீராக உள்ளது.
அவருக்கு தொடர்ச்சியான சிகிச்சையின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட உணவு முறை தொடங்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றார்” என்று கூறினார். 4 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சோனியாகாந்தி மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். புறநோயாளி அடிப்படையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்றும் தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.