டிராக்டர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனமான சோனாலிகா நிறுவனம், சிக்கந்தர் டீலக்ஸ் டிஐ60 டார்க் பிளஸ் என்ற டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.8.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 4,709 சிசி எச்டிஎம் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 275 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 12 எப் + 12 ஆர் மல்டி ஸ்பீடு டிரான்மிஷன் தொழில்நுட்பம் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த டிராக்டர் 2,200 கிலோ பளுவை சுமக்கக் கூடிய திறன் கொண்டது. எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் புரோ பிளஸ் பம்பர், பவர் ஸ்டீரிங் 5 ஜி ஹைடிராலிக்ஸ் இதில் இடம் பெற்றுள்ளன.
சோனாலிகா சிக்கந்தர் டீலக்ஸ் டிராக்டர்
240