பெரம்பூர்: ஆவடி வெள்ளானூரை சேர்ந்தவர் குடுபாய் (66). ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவரது மகன் மகன் அப்துல் ஹமீத் உறவினர் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக உறவினர்களுடன் நேற்று காரில் பேசின் பிரிட்ஜ் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பேசின் பிரிட்ஜ் அருகே காரை திருப்ப முயன்றபோது, எதிர்திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதில் 2 கார்களும் சேதம் ஏற்பட்டது.
மற்றொரு காரில் இருந்து கீழே இறங்கிய சாயிஷா என்பவருக்கும், அப்துல் ஹமீத்திற்கும் கைகலப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடுபாய் மற்றும் அவரது உறவினர்களுக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், குடுபாய் உள்பட இரு தரப்பிலும் காயடைந்தனர். இதுகுறித்து இருதரப்பிலும் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.