தர்பூசணியின் வெள்ளைப் பகுதியை சீவி, அரிசியுடன் சேர்த்து அரைத்து தோசை வார்க்கலாம். உளுந்து தேவையில்லை.
வாழைப் பழங்களை சீப்பாக வாங்கி, அதை எதன் மீதும் வைக்காமல், ஒரு கயிறு கட்டி அதில் தொங்க விட்டால் விரைவில் பழுத்துவிடாமல் இருக்கும்.
பாயசத்தில் திராட்சைக்கு பதில் பேரீச்சம் பழத்தை நறுக்கி சேர்த்தால் சூப்பராக இருக்கும்.
தயிர் புளிக்காமல் இருக்க, அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் போதும்.
ரவையை உப்புப் போட்டு பிசறி வைத்து, அதனுடன் உளுந்தை அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும்.
அதிரசம் செய்யும் போது சிறிது பேரீச்சம் பழம் கலந்து செய்தால் சுவையாகவும் இருக்கும், சாஃப்ட்டாகவும் இருக்கும்.
இரண்டு வாழைப் பழத்துடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து அதில் ஒண்ணரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு ஏலக்காய் பொடியுடன் ஏதாவது ஒரு எசன்ஸ் சேர்த்து விட்டால் சத்தான பாயசம் தயார்.
நறுக்கிய ஆப்பிள் மீதமாகி விட்டால் சிறிது உப்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாமலும், கெடாமலும் இருக்கும்.
ஆரஞ்சுப்பழத்தில் நான்கு கிராம்புகளை குத்தி அதை கிச்சனில் வைத்து விட்டால் கிச்சன் மணமுடன் இருக்கும். பூச்சிகளும் வராது.
– அமுதா
அசோக்ராஜா,
எம். ஏ. நிவேதா