புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டு முதல் கேபினெட் செயலாளராக இருந்த ராஜீவ் கவுபாவின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து ஒன்றிய நிதித்துறை செயலாளராக இருந்த டிவி சோமநாதன் கடந்த 10ம் தேதி கேபினெட் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் புதிய செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு சோமநாதன் இந்த பதவியில் நீடிப்பார்.