மொகடிஷூ: சோமாலியாவில் மொகடிஷூ நகரின் அப்டியாஜிஸ் பகுதியில் மிகவும் புகழ் பெற்ற லிடோ கடற்கரை உள்ளது. ஏராளமான உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் லிடோ கடற்கரையையொட்டி உணவு மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் குழுமியிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கடற்கரையில் கூடியிருந்த மக்களை நோக்கி தற்கொலை தாக்குதலை நடத்தினார்.
இதனால் பதற்றமடைந்த மக்கள் சிதறி ஓடினர். அப்போது அங்கு வந்த மேலும் 5 மர்ம நபர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் 32 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அல்-கொய்தா அமைப்பின் பிரிவான அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.