சென்னை: மின் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் சூரிய ஒளி மின் ஆற்றலை பெறுவதற்கான முயற்சியில், அதற்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக கடந்த 9ம் தேதி 5,979 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மார்ச் 3ம் தேதி சூரிய சக்தி மின் உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியது.
அன்று 5,398 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 24ம் தேதி 5,512 மெகா வாட்டும், கடந்த 2ம் தேதி 5,704 மெகாவாட் சூரிய சக்தி வாயிலாக மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த அளவுகளையும் கடந்து தமிழ்நாடு சூரிய மின் சாதனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது, கடந்த 9ம் தேதி 5,979 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. அன்றைய தினம் சூரிய சக்தி மூலம் மட்டும் 41.4 மி.யூ மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டது.