செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கம் சார்ந்த அனைத்து அலுவலர்களும் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பார்வை குறைபாடு தரவுகளை பற்றி கலெக்டர் விளக்கி
னார். அரசு மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் மருந்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான ஆலோசனை வழங்கி, அரசு, தொண்டு நிறுவனங்களின் மருத்துவர்கள் இணைந்து வட்டாரம்தோறும் மாதம் ஒரு கண் சிகிச்சை முகாம் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் இந்த ஆண்டு 12000 கண்புரை அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர ஆய்வு கூட்டம் மூலம் இத்திட்ட செயல்பாடுகள் வழி நடத்தப்படும். சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்கள் உள்ளிட்ட அனைத்து அரசு முகாம்களிலும் பொதுமக்கள், முதியோர், பார்வை குறைபாடுடையோர் தாமாகவே முன்வந்து பரிசோதனை, அறுவை சிகிச்சை செய்து பயனடையலாம். மேலும் கண்னொளி காப்போம் திட்டம் மூலம் 1 முதல் 6 வகுப்பு மாணவர்களுக்கு கண்பரிசோதனை செய்து கண்ணாடி வழங்கிடவும், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைங்களில் கண் பரிசோதனை செய்யவரும் மக்களுக்கு தேவைபடும் பட்சத்தில் கண் அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


