காங்கயம்: விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பழையகோட்டை, சித்தம்பலம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (எ) பூபதி (28) என்பவர் ஆபாசமாக பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காங்கயம் சட்ட மன்ற தொகுதி விசிக செயலாளர் ஜான். நாக்ஸ் தலைமையில் விசிகவினர் போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் திருமாவளவன் குறித்து ஆபாச கருத்து பதிவிட்ட சதீஸ்குமார் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சதீஸ்குமார் கொங்கு மக்கள் முன்னணி என்ற அமைப்பை சேர்ந்தவராவார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Advertisement


