சென்னை: சமூக வலைதளங்களில் சீருடையுடன் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டாம் என காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி, யூடியூப் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி பெற வேண்டும். வழக்குகள் பற்றிய ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை யூடியூப் நேர்காணலின்போது காவல்துறை அதிகரிகள் பகிர வேண்டாம். தேவைப்பட்டால் நிகழ்ச்சிகளில் பேசக்கூடிய தகவல்களை உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே பேச வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் சீருடையுடன் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டாம்: போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்
0