சேலம்: சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் அளித்த புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் அண்ணாமலை பேசியதாக பியூஷ் மனுஷ் புகார் அளித்துள்ளார். சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பியூஷ் மனுஷ் வழக்கு தொடர்ந்த நிலையில் அரசின் அனுமதியை பெற உத்தரவிட்டது. அரசு அனுமதி வழங்கியதை அடுத்து அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.