சென்னை: நடிகரும் மறைந்த மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமி மனைவி சவுந்தரா ராமசாமி மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: துக்ளக் நிறுவனரும் – ஆசிரியராகவும் இருந்து மறைந்த சோ ராமசாமி மனைவி சவுந்தரா ராமசாமி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சோ தனது வாழ்நாளில் பத்திரிகை உலகிலும், திரைத்துறை மற்றும் பொது வாழ்விலும் தனி முத்திரை பதித்ததற்கு உற்ற துணையாக இருந்த சவுந்தரா ராமசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.