Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் நடிகை சினேகா-பிரசன்னா சாமி தரிசனம்: செல்பி எடுத்த ரசிகர்கள்

திருத்தணி: நடிகை சினேகா, அவரது கணவர் நடிகர் பிரசன்னா ஆகியோர் இன்று காலை திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். செல்பி எடுத்து ரசிகர்கள் மகிழ்ந்தனர். திருத்தணியில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானை தரிசிக்க உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகை சினேகா, அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா ஆகியோர் இன்று காலை திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தனர். அவர்களை கோயில் பேஸ்கர் தாமோதரன் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து, ஆபத்சகாய விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகரை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் நடிகை சினேகா-பிரசன்னா தம்பதிக்கு மாலை அணிவிக்கப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. முருகப்பெருமானை தரிசிக்க கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய வந்திருந்த நடிகை சினேகா-பிரசன்னாவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் திருத்தணி முருகன் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.