சென்னை பப்ளிக் ஸ்கூலில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் சித்தார்த் கண்களைக் கட்டிக்கொண்டு ஸ்னேக் க்யூப் விளையாட்டில் 2.1 செகண்ட்சில் க்யூப் அமைத்து சாதனை படைத்துள்ளார். இவரின் ஸ்னேக் க்யூப் விளையாட்டுச் சாதனைகள் இஞ்ஜினியர்ஸ் வேல்ட் ரெக்கார்ட், ஏசியா புக் ஆப் வேல்ட் ரெக்கார்ட், இந்தியா புக் ஆப் வேல்ட் ரெக்கார்ட் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன. மாணவர் சித்தார்த் கூறும்போது, ‘‘நான் டிஸ்டிக்ட் லெவல்,
நேஷனல் லெவலில் இந்த விளையாட்டில் பங்கேற்றுள்ளேன். இண்டர்நேஷனல் லெவலில் பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆரம்பத்தில் யூடியூபை பார்த்துதான் பயிற்சி எடுத்துக்கொண்டேன். பயிற்சி எடுத்துக்கொண்டு போட்டிகளில் கலந்துகொள்ள அம்மா சொன்னதையடுத்து ஆனந்த் சாரிடம் பயிற்சி எடுத்து ஆரம்பத்தில் 7 செகண்டில் க்யூக் அமைத்தேன். அதன்பின் தொடர் பயிற்சியால் 2.1 செகண்ட் வரை க்யூப் அமைத்தேன். முதல் போட்டியில் பங்கேற்று முதலாவதாக வந்தேன்.’’ என்று தெரிவித்தார்.
சிவப்பு பாண்டா
சிவப்புப் பாண்டா (Red Panda) என்பது இமயமலையில் காணப்படும் ஒரு சிறியப் பாலூட்டி. அவை அவற்றின் தனித்துவமான சிவப்பு ரோமங்களுக்குப் பெயர் பெற்றவை மற்றும் IUCN (International Union for Conservation of Nature) அமைப்பால் அழிந்துவரும் நிலையில் உள்ளவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிவப்பு பாண்டா பூனையை விட சற்றுப் பெரியது.பெரும்பாலும் மரக்கறியே உண்ணும் ஒரு பாலூட்டி விலங்கு ஆகும். கரடிப் பூனை அல்லது பயர் பாக்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மூங்கிலையே உணவாகக் கொள்கின்றன. அடர்த்தியான முடிகளுடன் காணப்படும் இவை இமயமலையையும் தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை. இது சிக்கிமின் மாநில விலங்காகும்.
கங்கை நதி டால்பின்
கங்கை நதி டால்பின் என்பது அழிந்து வரும் நன்னீர் டால்பின் ஆகும். இது இந்தியாவில் கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா மற்றும் கர்ணபுலி-சங்கு நதிகளில் காணப்படுகிறது. வாழ்விடச் சீரழிவு, வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடி வலைகளில் தற்செயலாகச் சிக்குதல் போன்ற காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துள்ளது. இது தெற்காசியாவின் கங்கை மற்றும் தொடர்புடைய ஆறுகளில் , அதாவது இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் வாழ்கின்றன. இது பாகிஸ்தானில் உள்ள சிந்து நதியிலும், வடமேற்கு இந்தியாவின் பியாஸ் நதியிலும் வாழும் மிகச் சிறிய சிந்து நதி டால்பினுடன் தொடர்புடையது .கங்கை நதி டால்பின்கள் 1996ம் ஆண்டு முதல் IUCN(International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியலின் கீழ் அழியும் அபாயத்தில் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கை குறைந்ததில் மனித செயல்பாடு பெரும் பங்கு வகிக்கிறது. கங்கை நதி டால்பின் மற்றும் பிற நன்னீர் டால்பின் இனங்கள் சத்தம் மாசுபாடு, கப்பல் போக்குவரத்து மற்றும் மீன்பிடிப்பு போன்ற காரணங்களால் அழிவை எதிர்கொண்டுள்ளன. அணை கட்டுதல் மற்றும் நீர்மின் நிலையங்கள் போன்ற மானுடவியல் செயல்பாடுகளும் அவற்றின் அழியும் நிலைக்கு காரணங்களாகின்றன.