சென்னை: செப்டம்பர் மாதம் முதல் சென்னை அண்ணா நகரில் ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம் அமலுக்கு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வாகனத்திற்கு ரூ.60, கார்களுக்கு ரூ. 40 இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20 பார்க்கிங் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் செயலி மூலம் முன்கூட்டியே பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்யலாம். யுபிஐ, ரொக்கப் பரிவர்த்தனை முறைகளில் கட்டணம் செலுத்தலாம்