சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக ரூ.3.30 லட்சம் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கு மின்சார வாரியம் புதிய டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் வீடுகளில் மின்பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.
ஏற்கனவே சென்னை மாநகரில் 1 லட்சத்து 42 ஆயிர இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அந்த செயல்பாடுகள் அடிப்படையில் அனைத்து இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஜூன் மாதம் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டன.
இதில் பங்கேற்ற நிறுவனங்கள் ஏராளமான சந்தேகங்களை முன்வைத்ததால் டெண்டரை மின்சாரவாரியம் ரத்து செய்தது. இந்நிலையில் ஒரே கட்டமாக ரூ.3.30 லட்சம் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. புதிய டெண்டரில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் தேர்வாகும் நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கு மீட்டர்களை பொருத்துவது தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துவது என அணைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தபனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் பணிக்காக அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.