* மிளகாய் பொடியுள்ள டப்பாவில் சிறு துண்டு பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். மணமும் கூடும்.
*உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் போன்ற வற்றை வைத்துள்ள டப்பாக்களில் ஒன்றிரண்டு கிராம்பு போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.
*தேயிலையை பத்து நிமிடங்களுக்கு ஓவனில் வைத்து 180 டிகிரிக்கு சூடு படுத்தி, ஆறியதும் காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை புதிது போலவே இருக்கும்.
*வெண்டைக்காய்களின் மீது சிறிது கடுகு எண்ணெயை தடவி வைத்தால் நீண்ட நாட்களுக்கு பச்சைப் பசேலென்று இருக்கும்.
*இஞ்சியையும், பூண்டையும் எண்ணெயில் வதக்கி, பிறகு அரைத்து விழுதை அதே எண்ணெயில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
*பனீர் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வினிகர் தெளித்து பாலிதீன் பையில் போட்டு வைக்கவும்.
* பட்டன் காளான்களை உப்புக் கலந்த தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். ஒரு நிமிடம் கழித்து வடிகட்டி, ஆறவைத்து, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.
*காளான், கத்தரிக்காய்களை பிளாஸ்டிக் பேப்பரில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. நியூஸ் பேப்பரில் போட்டு வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.
*மூலிகைகளை பாதுகாப்பாக வைக்க அவற்றை பிளாஸ்டிக் பையில் போட்டு வைக்கவும்.
*ஏலக்காய், கிராம்பு, மிளகு போன்றவற்றை காற்று புகாத டப்பாவில் ஒன்றாகவே போட்டு வைக்கலாம். நீண்ட நாட்களுக்கு கெடாமலிருக்கும்.
– எம். ஏ. நிவேதா, அமுதா அசோக்ராஜா