* அரிசி பாத்திரத்தில் நொச்சி இலை, வேப்பிலை, வசம்பு இவை மூன்றில் ஏதேனும் ஒன்றை போட்டு வைத்தால் அரிசியில் வண்டு அண்டாது.
* பூரிக்கு மாவு பிசையும்போது வெது வெதுப்பான நீரில் உப்பு, சிறிதளவு சர்க்கரை, எண்ணெய் ஊற்றி பிசைந்தால் பூரி நன்றாக பூரித்து வரும்.
* மட்டன் கோலா செய்யும் போது ரஸ்க்கை பொடி செய்து அதில் புரட்டிதயாரித்தால் சுவை கூடும்.
* மீன் பொரித்த எண்ணெயில் மீன்குழம்பு தாளித்தால் எண்ணெய் வீணாகாது. குழம்பும் பார்ப்பதற்கு எண்ணெய் பதத்தோடு இருக்கும்.
* பருப்பு டப்பாக்களில் வெள்ளைப் பூண்டின் நடுக்காம்பு, உப்பு இரண்டையும் துணியில் பொதிந்து வைத்தால் பருப்பின் சுவை குறையாது. வண்டும் வராது.
* மிளகாய் தூள் டப்பாவில் அதன் மையப்பகுதியில் இரண்டு மிளகாய் வற்றல்களை போட்டு வைத்தால் தூளின் தரம் மாறாமல் இருக்கும்.
* இட்லி மாவு மீதமானால் அதில் பழுத்த வாழைப்பழம், பேரீச்சம் பழம், கிஸ்மிஸ் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் வெல்லப்பாகுவையும் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு அப்பம் போன்று சுட்டெடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
– அ.ப. ஜெயபால்