* உளுந்து வடை செய்யும் போது மாவில் சிறிது சேமியாவைத் தூள் செய்து போட்டால் வடை சூப்பராக, சுவையாக இருக்கும்.
*அவியல், பொரியல் மீந்துவிட்டால் அவற்றில் உள்ள நீரை வடித்து விட்டு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கடலைமாவு, அரிசி மாவு கலந்து வெஜிடபிள் பக்கோடா செய்து விடலாம். சூப்பராக இருக்கும்.
*பீட்ரூட் துருவலுடன் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். அந்தப் பாகை இடியாப்பத்தில் ஊற்றிப் பிசறினால் சுவையான சத்தான இடியாப்பம் தயார்.
*முருங்கைக் காயை அப்படியே ஃபிரிட்ஜில் வைத்தால் காய்ந்து குச்சி போல் ஆகிவிடும். ஒரு பேப்பரில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் காய்ந்து போகாமல் ஃப்ரஷ்ஷாகவே இருக்கும்.
* உளுந்து வடைக்கு அரைக்கும் போது சிறிது துவரம் பருப்பு சேர்த்து அரைத்தால் மிருதுவாக இருக்கும்.
*எலுமிச்சை, நார்த்தங்காய் இவற்றில் ஊறுகாய் போடும் போது, அவற்றில் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும். இல்லா விட்டால் ஊறுகாய் கசந்து போய் விடும்.
*மிளகாய் வற்றல் 15, பூண்டுப் பற்கள் 10, சிறிது புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். கைப்பிடி வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் கடுகு, போட்டு வெடித்தவுடன் சிறிது பெருங்காய தூளைப் போடவும். பொரிந்தவுடன்மிளகாய் விழுதையும் போட்டுக் கிளறவும். இந்த சட்னி பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.
*துவரம் பருப்பை வேக வைக்கும் போது சிறிய தேங்காய்த் துண்டு ஒன்றை போட்டு விட்டால் பருப்பு விரைவில் பக்குவமாக வெந்து விடும்.
*தோசைக்கு அரைக்கும் போது கொஞ்சம் வெண்டைக்காயையும் சேர்த்து அரைத்தால் தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.
*ஆலு பரோட்டா செய்யும் போது மசியலில் சிறிது ஓமம் சேர்த்து பூர்ணம் செய்தால் டேஸ்ட்டாகவும் இருக்கும். வாயுப் பிடிப்பும் ஏற்படாது.
*இடியாப்பம் செய்வதற்கு தண்ணீர் கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பிறகு மாவில் ஊற்றிப் பிசைந்து பிழிந்தால் டேஸ்ட்டாக இருக்கும்.
*பிரட் காய்ந்து போனால் அதை இட்லிப் பானையில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் வேக விட்டு எடுத்தால் புது பிரட் போல் ஆகி விடும்.
– அமுதா,
அசோக்ராஜா