* சமைக்கும்போது மீன் கறுத்து விட்டால் சிலதுளி எலுமிச்சம் சாறு விடவும். சரியாக வெந்து மீன் விண்டு போகாமல் இருக்கும்.
* வெகு நாட்களாக பிளாஸ்க் பயன்படுத்தாமல் இருந்தால் அதில் சிறிது சர்க்கரையை கொட்டி வைத்தால் கெட்ட வாடை வீசாது.
* அரை டீஸ்பூன் துளசிப் பொடி அல்லது துளசி சாறுடன் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் தொண்டை வலி, தலைவலி வராது.
* வெங்காயத் துண்டை பல்லிகள் நடமாடும் இடத்தில் வைத்தால் பல்லி தொல்லை இல்லை.
* கோதுமை மாவோடு கொஞ்சம் ரவை கலந்து பூரி சுட்டால் வெகு நேரம் மொறு மொறுவென இருக்கும்.
* சமையல் மேடையை கடலை மாவு போட்டு தேய்த்தால் எண்ணெய் பிசுக்கு போய் விடும்.
* பட்டுச் சேலைகள் வைக்கும் அலமாரியில் ஒரு கைக்குட்டையில் சென்ட் தெளித்து வைத்தால் புடவை எப்போதும் நறுமணமாக இருக்கும்.
* கனமான போர்வைகளை சோப்புப் போட்டு துவைக்கும் முன்னர் வெந்நீரில் ஊறவைத்து துவைத்தால் பளிச்சென இருக்கும்.
* சப்பாத்தி மாவில் வெந்தயக்கீரைப் போட்டு பிசைவது போல புதினாவையும் பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டு பிசைந்தால் சப்பாத்தி மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* புது செருப்பு காலைக் கடித்தால் கால் மணி நேரம் தண்ணீரில் போட்டு, காயவைத்து பயன்படுத்தினால் காலை கடிக்காது.
* வெயிலுக்கான நீர்மோரில் பச்சை மிளகாய்க்கு பதிலாக சிறிதளவு பொடித்த சுக்கு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
– விமலா சடையப்பன்
குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
0
previous post